உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா மார்ச் 4ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா மார்ச் 4ல் கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 4ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடங்கும் வகையில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளஅனுக்ஞை விநாயகர் முன் மார்ச் 3 அன்று அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது. மார்ச் 4ல் காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக மார்ச் 9ல் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருள கைபாரம் நிகழ்ச்சியும், மார்ச் 15ல் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், மார்ச் 16ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம், மார்ச் 17ல் தேரோட்டம், மார்ச் 18ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழா நடக்கும் நாட்களில் தினம் காலையில் தங்க சப்பரம், இரவு தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளியானை, அன்னம், ரிஷபம், வெள்ளி ஆட்டுக்கிடாய், வெள்ளி பூதம், பச்சைக் குதிரை வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !