உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தை அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

அனுமந்தை அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அனுமந்தை அங்காளம்மன் கோவிலில், மாசிமாத அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சின்னசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !