மேட்டுமகாதானபுரம் அங்காளம்மன் கோவில் திருநங்கையர் வழிபாடு
ADDED :3147 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டுமகாதானபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி, காவிரி ஆற்றில் இருந்து கரகம்பாலித்தல், அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நடந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திருநங்கையர் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் நடத்தினர்.