உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி குபேரன் திருமஞ்சன விழா!

லட்சுமி குபேரன் திருமஞ்சன விழா!

விழுப்புரம் : விழுப்புரம் லட்சுமி குபேரன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோடு திருநகரில் உள்ள லட்சுமி குபேரன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலையில் அலங்கார தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை தீபாவளி மற்றும் அம்மாவாசையை முன்னிட்டு அம்மன் நவலட்சுமி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து பஞ்சலோக உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !