மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :5464 days ago
செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நள்ளிரவு ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தாலாட்டு பாடல்கள், பக்தி பாடல்கள் பாடப்பட்டன.