மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா!
ADDED :5133 days ago
மயிலம் : மயிலம் கோவிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் வரும் 31ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை 6 மணிக்கு யாக சாலை பூஜைகளுடன் விழா துவங்கியது. இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 31ம் தேதி மலைக் கோவில் தேரடி வீதியில் இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் முருகன், சூரன் வேடம் அணிந்து பத்மா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நாடகமாக நடத்தப்படுகிறது.