உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழுங்க கோவை கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்

ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழுங்க கோவை கோனியம்மன் தேரோட்டம் கோலாகலம்

கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் ராஜ வீதியில் திரண்டு திருவிழாவை கொண்டாடினர்.

கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது.இந்தாண்டு தேர் திருவிழா, கடந்த 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிசட்டி ஏந்துதல் நடைபெற்றது. 24ம் தேதி திருவிளக்கு பூஜையும், 28ம் தேதி  திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இதையடுத்து, இன்று தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராஜ வீதியில் திரண்டு தேரை வடம் பிடித்து திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

புதிய தேர்: இந்தாண்டு கோனியம்மன் கோவிலுக்கு, 21.5 லட்சம் ரூபாயில், புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த, 13ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !