நடராஜப் பெருமான் கால்மாறி ஆடிய தலம்!
ADDED :3147 days ago
மதுரையை ஆண்ட பாண்டியமன்னன் பரதநாட்டியம் படித்தான். கால்வலி தாங்க முடியவில்லை. ஒருநாள் ஆடியதற்கே இப்படி வலிக்கிறதென்றால், இரவும் பகலும் ஆடிக்கொண்டே இருக்கும் நடராஜரின் கால் எப்படி வலிக்கும் என அவன் மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலுக்குள் இருக்கும் வெள்ளியம்பல நடராஜர் முன் நின்று அழுதான். கால் மாற்றி யாவது ஆடக்கூடாதா என கதறினான். இறைவனும் மன்னனுக்காக கால்மாறி இடக்காலை ஊன்றி, வலக்காலை துõக்கியபடி ஆடினார்.