முதுகுளத்துார் முனீஸ்வரர் கோயில் திருவிழா
ADDED :3138 days ago
முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவு செய்தனர். இங்கு சிவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பாரிவேட்டையுடன் களரி விழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த களரி விழாவைத் தொடர்ந்து நேற்று பரிவார பூஜை பொருட்கள் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவுசெய்தனர்.