உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஊத்துக்கோட்டை: துர்கை அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மை வழிபட்டனர். ஊத்துக்கோட்டையில் ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள துர்கை அம்மன் சன்னிதியில் நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது. 108 குங்கும அர்ச்சனை செய்து, மலர் அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, பக்தர்கள் வழிபட்டனர்.இதே போல், சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் சன்னிதியில் உள்ள, துர்கை அம்மன் உள்ளிட்ட பெரும்பாலான துர்கை அம்மன் சன்னிதியில், சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !