உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமனுார் மாகாளியம்மன் பொங்கல் விழா

சோமனுார் மாகாளியம்மன் பொங்கல் விழா

சோமனுார் : ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா துவங்கியது. சோமனுார் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த, 21ம் தேதி கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு துவங்கியது. நேற்று முன்தினம் சக்தி கரகம் எடுக்கப்பட்டது. வரும், 6ம் தேதி விநாயகர், கருப்பராயன் பொங்கல் மற்றும் அபிஷேக பூஜைகள் நடக்கின்றன. அம்மை அழைத்தல், படைக்கலம் எடுத்தல், 7ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், மாகாளியம்மன் திருவீதியுலா நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டி வழிபாடு நடக்கும். மாலையில் முளைப்பாரி ஊர்வலம், கம்பம் எடுத்தல் நடைபெறுகிறது. விழாவில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !