ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
ADDED :3136 days ago
ஊமச்சிகுளம்;மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா நடந்தது. காலையில் வேதபாராயணம், பூஜை முடிந்து மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது:ஆன்மிக அனுபவங்களின் உச்ச வரம்பே பகவான் ராமகிருஷ்ணர். அவரின் போதனைகளில் இறைவனையே உன் மனம் நாடியிருக்கட்டும், தொண்டு செய், சமய சமரசம் ஆகிய 3ம் இருந்தது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஐக்கியமாவது ஞானம் என்றும், இறைவனுடைய தெய்வீக வடிவத்தை நேரில் தரிசிப்பது பக்தி என்றும் பெயர்.மனிதனின் சொல்லும், செயலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். பக்தியுடன் இறைவன் நாமத்தை பாடினால் மலை போல் குவிந்து கிடக்கும் பாவங்கள் அனைத்தும் சாம்பலாகிவிடும், என்றார்.