உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை இயேசு பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்காலம் துவக்கம்

குழந்தை இயேசு பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்காலம் துவக்கம்

சூரமங்கலம்: சேலம், குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலத்தை நேற்று முதல் துவக்கினர். பங்கு தந்தை கிரகோரிராஜன் தலைமையில், துவக்க திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, மந்திரிக்கப்பட்ட சாம்பலை நெற்றியில் பூசி, மனிதனே நீ மண்ணாயிருக்கிறாய் மண்ணிற்கே திரும்புவாய் என்ற விருதுவாக்கோடு பாவபரிகாரத்தை மேற்கொண்டு ஜெபம், தவம், ஈகை போன்ற பக்தி முயற்சிகளில் ஈடுபட்டனர். 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்து, இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா ங்ஈஸ்டர்சி பண்டிகை கொண்டாடுகின்றனர். அகில உலக கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்து, மாபெரும் தவக்காலத்தை தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகளை பங்கு உபதலைவர் கிங்மார்ஷல், செயலர் ஹென்றி வில்சன், ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !