உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_65768_163740558.jpgவிருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_65768_163750990.jpgவிருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகப் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, காலை பகல் 11:00 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதையடுத்து, 11:15 மணியளவில் ஊர்வலமாக கொடி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிக்கு பூஜை செய்து, வன்னியடி சுற்று கொடி மரத்திற்கு பால் அபிஷேகத்துடன், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, மற்ற நான்கு கொடி மரங்களிலும் கொடியேற்றப்பட்டன. அதில், 500க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !