வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதின இளைய மடாதிபதி சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் குருஞானசமபந்தரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தருமை ஆதினம் அமைந்துள்ளது. சைவத்திருமடங்களி ல் முதன்மையான இந்த ஆதீனத்தின் 26 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். ஆதீனத்தில் இளைய மடாதிப தியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து இன்று தருமை ஆதினத்தின் நிர்காகத்தில் வைத்தீஸ் வரன்கோயில் அமைந்துள்ள நவகிரகங்களில் செவ்வாய் தலமும், நோய்களை தீர்க்கும் ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு இளைய மடாதிபதியாக பதவியேற் ற பிறகு முதன்முறையாக வருகை தந்த ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளுக்கு கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் சுவாமி, அம்பாள் மற்றும் அங்ககாரன் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவர் பக்தர்களுக்கு அ ருளாசி வழங்கினார். பின்னர் கோயில் மடத்தில் நடைபெற்ற மகேஸ்வர பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள்,கோயில் கோ யில் சிப்பந்திகள் மற்றும் பக்தர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த கோயிலில் சுவாமி தரிசனம் செய்தால் சகல நோய் களும் தீரும். நவகிரகங்களில் செவ்வாய் தனக்கு ஏற்பட்ட குஷ்ட நோய் தீர இத்தலத்தில் சுவாமியை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் பொறுப்புகளை பெரியவர்கள் வைத்துக்கொண்டு, இளஞர்கள் மூலம் நிர்வாகத்தை நடத்தினால் சிறப்பாக அமையும் என்ற பாங்கினை உணர்த்தும் வகையில் இந்த தலத்தில் சுவாமி பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் நிர்வாகம் குழந் தையான முத்தையாவிடம் உள்ளது. குழந்தைகள் வெளியே செல்லும் போது தாய், தந்தையரை வணங்கி செல்லவேண்டும் என்பதை உணர்த்தும் விதத்தில் முத்தையா வெளியே செ ல்லும் போது தாய், தந்தையான சுவாமி,அம்பாளிடம் செல்லிவிட்டு செல்கிறார். பெற்றோர் மற்றும் வரதானவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கக்கூடாது. தருமை ஆதினகுருமகா சன்னிதானத்தின் திருவுள்ள படி விரைவில் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார்.