உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்த தைவான் தம்பதிகள்!

சீர்காழியில் இந்து கலாச்சாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்த தைவான் தம்பதிகள்!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் ஆமைந்துள்ளது.இந்த சித்தர் பீடத்துக்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் தைவான் நாட்டில் தய்பே நகரத்தை சேர்ந்த 60 வயது பூர்த்தியடைந்த மௌலுங்-,சுன்செங் தம்பதியினர் இந்து கலாச்சாரத்தின் மீது கொ ண்ட ஈடுபாடு காரணமாக இந்துமுறைபடி தங்களது சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் சஷ்டியப்தபூர்த்தி, ஒளிலாயம் சித்தர் பீடத்தில் சிறப்பாக ந டைபெற்றது. முன்னதாக மிர்த்தியங்ஜெயம் ஹோமம், கோபூஜை செய்யப்பட்டு, கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை தைவான் தம்பதிகள் மீது ஊற்றி, அவர்களது உறவினர்கள் கலசாபிஷேகம் செய்தனர். பின்பு மேளவாத்தியம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து மாங்கல்யதாரனம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் அங்கு கூடியிருந்த மக்களை ஆசிர்வாதம் செய்தனர். இந்து கலாசாரப்படி சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்ட தைவான் நாட்டு தம்பதிகளை போது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, வாழ்த்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !