சிவகங்கை பெருமாள் கோயிலில் மார்ச் 8ல் கும்பாபிஷேகம்
ADDED :3152 days ago
சிவகங்கை: சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 8ம்தேதி காலை நடக்கிறது. இக்கோயிலில் இன்று காலை 9:30 மணிக்கு ஆசார்யவரணம், அனுக்ஞை, புண்யாஹவாசனம், சாந்திஹோமம், வாஸ்து சாந்தி, மாலை 5:30 மணிக்கு ரக் ஷாபந்தனம், வேதபாராயணங்கள், ஹோமங்கள், இரவு 8:30 மணிக்கு பூர்ணாகுதி, 9:30 மணிக்கு மருந்து சாத்துதல் நடக்கிறது. 7ம்தேதி காலை விஸ்வரூபம், திருவாராதனம், 11:00 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 5:30 மணிக்கு பாராயணங்கள், ஹோமங்கள் நடக்கிறது. 8ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம்,மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு பெருமாள் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது. விழா நாட்களில் திவ்ய பிரபந்தம், சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.