ஈரோடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி விழா
ADDED :3146 days ago
ஈரோடு: அங்காள பரமேஸ்வரி கோவில் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு கீரக்காரவீதி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி, குண்டம் திருவிழா, பிப்.,24ல் தொடங்கியது. நேற்று அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி முதலில் இறங்கினார். அவரை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சிலர் அலகு குத்தியபடி குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடந்தது. மாலையில் சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் உற்சவர் திருவீதி உலா சென்றது. ஈரோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், திரளாக கலந்து கொண்டனர்.