உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் மாசி தெப்பம்: மார்ச் 12ல் உற்சவம்

திருக்கோஷ்டியூர் மாசி தெப்பம்: மார்ச் 12ல் உற்சவம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவம் மார்ச் 12ல் நடக்கிறது. தெப்ப உற்சவம் : மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று, கருடசேவையில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று காலை 9மணிக்கு சுவாமி புறப்பாடு, இரவு 8:00 மணிக்கு சேஷவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.மார்ச் 11ல் வெண்ணெய் தாழி சேவையில் திருவீதி புறப்பாடு, மார்ச் 12 காலையில் பகல் தெப்பம், இரவு 10 மணிக்கு இரவு தெப்பம் நடக்கும்.மார்ச் 13 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியுடன், தெப்ப உற்சவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !