சேமங்கலத்தில் நாளை மகா கும்பாபிஷேகம்
ADDED :3224 days ago
உளுந்துார்பேட்டை: சேமங்கலம் அங்காள பரமேஸ்வரி கோவில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. உளுந்துார்பேட்டை அடுத்த சேமங்கலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, இன்று மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 6:00 மணிக்கு கோ பூஜையும், 2ம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து, 10:00 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடாகி, 10:45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.