உடுமலை பகுதியிலுள்ள கோவில்களில் சூரசம்ஹார விழா!
உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், இன்று சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று காலை 5.30 மணிக்கு வேள்வி பூஜை, அபிஷேகம், காலை 9.00 மணிக்கு அலங்காரம், தீபாராதனை பூஜைகளும்; மாலை 3.15 மணிக்கு கந்தசஷ்டி சூரசம்ஹாரமும், மாலை 6.00 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை காலை 10.00 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7.00 மணிக்கு வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் புகழ்பெற்ற ஞானதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோயிலில் சூரசம்ஹார விழா கடந்த 26ம் தேதி மங்கள இசையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று (31ம் தேதி) மாலை 5.30 மணிக்கு தாராகாசுரவதம், பானுகோபன்வதம், சங்கமுகசுரன்வதம், சூரபத்மன்வதம் ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.