உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாக பிரும்மம் 250ம் ஆண்டு ஜெயந்தி விழா மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு

தியாக பிரும்மம் 250ம் ஆண்டு ஜெயந்தி விழா மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு

புதுச்சேரி: திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான, தியாக பிரும்மம் 250ம் ஆண்டு மாசி மாத ஜெயந்தி விழா இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது.புதுச்சேரி சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி அரங்கில், திருவாரூர் தியாகபிரும்மம் 250ம் ஆண்டு ஜெயந்தி விழாவில், புதுச்சேரி பைரவி சபா, திருவாரூர் இசைப்பிரியா மற்றும் வீணை விதுாஷி லஷ்மிதுரைசாமி அறக்கட்டளையினர் இணைந்து நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன், மயிலம் பொம்மபுர ஆதினம் ஆதீனகர்த்தர் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வாழ்த்தி பேசினர்.தொடர்ந்து, மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா பாட்டு, டில்லி சுந்தரரா ஜன் வயலின், திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஷ் ணன் கடம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !