நாளை ஸ்ரீவாரி பஞ்சகருட சேவை
ADDED :3155 days ago
அம்மாபேட்டை : நாளை, ஐந்து பெருமாள் கோவில்களில் இருந்து, உற்சவர் பெருமாள்கள், கருட வாகனத்தில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். சேலம், சிங்கமெத்தை பகுதி இளைஞர்கள், ஸ்ரீவாரி பஞ்சகருட சேவை குழு என்ற அமைப்பை துவக்கினர். அவர்கள், கோட்டையில் நடக்கும் பஞ்சகருட சேவையில் பங்கேற்க இயலாத ஐந்து பெருமாள் கோவில்களில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் கருட வாகனத்தில் பெருமாள்கள் அருள்பாலிக்கும் பஞ்சகருட சேவை நிகழ்ச்சியை, கடந்தாண்டு நடத்தினர்.இரண்டாம் ஆண்டாக, நாளை மாலை, 6:00 மணிக்கு, பொன்னாடம் வெங்கட்ராமய்யர் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு சந்திப்பில், ஐந்து பெருமாள் கோவில்களிலும் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சர்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வரும் பெருமாள்கள், ஒரே இடத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.