உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்!

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இன்று காலை 8 மணிக்கு சட்டத் தேரோட்டம் நடக்கிறது. இக்கோயிலில் அக். 26ல் துவங்கிய சஷ்டி விழாவில், இரண்டாயிரம் பக்தர்கள் காப்பு கட்டி, கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொண்டனர். அவர்களுக்கு தேன், சர்க்கரை கலந்த தினை மாவு, பால், எலுமிச்சம் பழச்சாறு கோயில் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று காலை பக்தர்கள் மாவிளக்கு வைத்து விரதத்தை பூர்த்தி செய்தனர்.சூரசம்ஹாரம்: நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் வேலுடன் தங்க மயில் வாகனத்திலும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும் ரத வீதிகளில் புறப்பாடாகினர். பல உருவங்களில் மாறி மாறி சென்ற சூரபத்மனை, சுப்பிரமணிய சுவாமி வேல் கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாதர் கோயில் முன் வெள்ளை குதிரை வாகனத்தில் ரமேஷ் சிவாச்சார்யார், கையில் வாள் ஏந்தி சூரசம்ஹார புராண கதையை கூறினார். உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இரவு பூ பல்லக்கில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !