செம்பக்கொல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பந்தலுார்: பந்தலுார் அருகே, கொளப்பள்ளி டான்டீ செம்பக்கொல்லி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பந்தலுார் அருகே, கொளப்பள்ளி டான்டீ சரக எண் இரண்டுக்கு உட்பட்ட செம்பக்கொல்லி பகுதியில், முத்துமாரியம்மன், ஆலயத்தின், 36ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து, 5ம் தேதிமுதல் பல்வேறு பூஜைகள் நடந்தன. கடந்த, 9ம் தேதி காலை, 7:00 மணி முதல், 9:30 மணிக்குள் இரண்டாம் கால யாகசாலை நடந்தது. 10:30 மணிக்கு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், தியாகராஜா குருக்கள் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், டான்டீ பொது மேலாளர் கலாநிதி, கோட்ட மேலாளர் புஷ்பராணி, கள நடத்துநர்கள் ஹரிபிரசாத், தேவன், தொழிற்சங்க தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் டான்டீ, அய்யன்கொல்லி, தட்டாம்பாறை, அத்திச்சால், கொளப்பள்ளி, மழவன்சேரம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.