/
கோயில்கள் செய்திகள் / போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா : பக்தர்கள் விரதம் துவக்கம்
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா : பக்தர்கள் விரதம் துவக்கம்
ADDED :130 days ago
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். சஷ்டி விரதம் துவங்கும் வகையில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி முருகனுக்கு தினம் தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது.