/
கோயில்கள் செய்திகள் / அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் கங்கணம் அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்
அலகுமலை முத்துக்குமார சுவாமி கோவிலில் கங்கணம் அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்
ADDED :29 minutes ago
பொங்கலூர்; பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று கந்தர் சஷ்டி விழா மகா கணபதி யாக வழிபாட்டுடன் துவங்கியது. கந்தர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சிவாச்சாரியார் கையால் நேற்று காப்பு அணிந்து கொண்டனர். மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாக பூஜை மகா தீப ஆராதனை நடக்கிறது. வரும், 27 ல் சூரசம்காரம், சம்ஹார மூர்த்திக்கு சாந்தாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதத்தை முடிக்கின்றனர். 28 திருக்கல்யாணம், மகா தீபாராதனை, மகா தரிசனம், அன்னதானம் நடக்கிறது.