உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

விருதுநகர் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் துவங்கியது.


மேலும் அக். 23 முதல் 26 வரை விசேஷ தீபாராதனை, சுவாமி ஆறுமுறை உள்பிரகாரம் வலம் வருதல் நடக்கிறது. அக். 27 மாலை 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் திருவிழா, அக்.28ல் வாலசுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்துார் : வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு சிறப்பு யாக சாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி வழிபாடு நடந்தது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு கோயில் பட்டர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் முருகன், வள்ளி, தெய்வானை வீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதே போல் பழனி ஆண்டவர் கோயில், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. திருத்தங்கல் : கருநெல்லி நாத சுவாமி கோயில் பழனியாண்டவர் சன்னதியில் கந்த சஷ்டி திருக்கல்யாண விழா காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி ரத வீதியில் தங்கரத பவனி வந்தது. அக். 28 ல் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !