துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை
ADDED :3136 days ago
அவலுார்பேட்டை : துறிஞ்சிப்பூண்டியில், மழை வேண்டி ஏரிக்கரையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, துறிஞ்சிப்பூண்டி கிராமத்தில் மழை பொய்த்து போனதால், விவசாயம் பாதிக்கப்பட்டது.தற்போது கிணறுகள், ஏரிகள் வறண்டு குடிநீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி மழை வளம் வேண்டி ஏரியில் பொங்கல் வைத்து, ஏரிக்கரையில் உள்ள ஏரிகாத்தான் சுவாமி மற்றும் வருண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையுடன் பூஜைகளை செய்து வழிபட்டனர்.