உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுடன் குண்டம் விழா துவக்கம்

பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுடன் குண்டம் விழா துவக்கம்

ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில், குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் ஸ்தல விருட்சமான வேம்பு மரத்துக்கு, மஞ்சள் பூசி, அலங்காரம் செய்து பூ போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மூலவருக்கு பூ சொரிதலும், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி, கோவில் முழுவதும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. நிகழ்ச்சியில், கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். வரும், 31 இரவு, கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !