உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி மடம் சுவாமிகள் பங்கேற்பு

ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேகம்: சிருங்கேரி மடம் சுவாமிகள் பங்கேற்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஸ்ரீ ஆதிசங்கரர் கோவில் கும்பாபிஷேக விழாவை, சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ மஹா ஸன்னிதானம் தலைமையில், அவரது சீடர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸன்னிதானம் நடத்தி வைத்தார். சிருங்கேரி சாரதா மடம் சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ மஹா ஸன்னிதானம், அவரது சிஷ்யர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸன்னிதானம் ஆகியோர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். முதல் நிகழ்ச்சியாக, ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ மஹா ஸன்னிதானம் தலைமையில், நேற்று காலை, 10:30 மணியளவில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தலைமை தபால் நிலையம் சாலையில் அமைந்துள்ள, ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் கோவிலில், ஸ்ரீஸ்ரீவிதுசேகர பாரதீ ஸன்னிதானம் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், ஏ.வி.எஸ்., மஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ஸன்னிதானங்களின் அருளுரை நடந்தது. இன்று, கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பவானியில் கட்டப்பட்டு வரும் மடத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதில் இருவரும் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !