திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :3128 days ago
திருநீர்மலை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கும். இந்தாண்டு, 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து, மாலையில், சுவாமி வீதி உலா நடந்தது. இவ்விழாவில், ஐந்தாம் நாளில் கருடசேவையும், ஏழாம் நாளில் தேரோட்டமும் நடக்க உள்ளது. ஒவ்வொரும் நாளும் காலை, மாலையில், சுவாமி வீதிஉலா நடக்கும். முதல் நாளான நேற்று, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.