உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரட்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

கரட்டூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

கோபிசெட்டிபாளையம்: கோபி கரட்டூர் வேம்படி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அக்., 29ம் தேதி மகா கணபதிஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கொடியேற்றம், விக்னேஷ்வரர் பூஜை, கும்பலங்காரம், அங்குரார்பணம், முதல்காய யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் திருப்பள்ளி எழுச்சி, விக்னேஸ்வரர் பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, மூலமந்திர ஹோமம், காயத்திரி ஹோமம், கோபுரத்துக்கு தானியம் நிரப்புதல், கோபுரம் கண் திறப்பு, கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, புண்யாக வாசனம், நான்காம் கால யாக வேள்வி பூஜைகள், அதர்வனவேத பாராயணம், மூலமந்திர ஹோமம், 1008 திரவியாகுதி, நாடிசந்தானம் பூஜைகளும், வேம்படி விநாயகர், கோபுர விமானம், மாரியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு மகஹா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !