உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்!

அம்மன் கோவிலை சூழ்ந்தது வெள்ளம்!

திருப்பூர் : நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மங்கலம் தடுப்பணை நிரம்பி வழிகிறது; நல்லம்மன் கோவில், வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவது கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது. இதனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள மங்கலம் தடுப்பணை நிரம்பி, அதிகளவு வரும் வெள்ள நீர் வழிந்து ஆற்றில் கலக்கிறது. வேகமாக வரும் வெள்ள நீர், தடுப்பணையை தாண்டி ஆர்ப்பரித்து விழுகிறது. தடுப்பணையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் வெள்ள நீரால் சூழப்பட்டுள் ளது; கோவிலுக்குச் செல்லும் தரைமட்ட பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கோவில் உள்பகுதியிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !