கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
ADDED :3319 days ago
மானாமதுரை: இடைக்காட்டூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சர்ச் உள்ளது. இந்த சர்ச்சிற்கு தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கிறிஸ்தவர்கள் வந்து ஆராதனை செய்வர். கடந்த மார்ச் 1ந்தேதி தவக்காலம் துவங்கியதையடுத்து ஏராளமான கிறிஸ்தவர்கள் விரதத்தை தொடங்கினர். மதுரை ஞானஒளிவுபுரம்,ஆரப்பாளையம்,அண்ணாநகர் மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை பாதயாத்திரையாக இடைக்காட்டூருக்கு வந்தனர். நேற்று காலை இடைக்காட்டூர் சர்ச் வந்தடைந்தவர்களை பாதிரியார் ரெமிஜீயஸ் வரவேற்றார். அவர்களுக்காக சிறப்பு திருப்பலி,ஆராதனை விழா நடைபெற்றது.