உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரை நிமிடத்தில் கங்கை குளியல்!

அரை நிமிடத்தில் கங்கை குளியல்!

தீர்த்த யாத்திரை சென்று கங்கையில் புனித நீராடிய புண்ணியத்தை வீட்டில் இருந்து, அரை நிமிட நேரத்தில்  எளிதாகப் பெற முடியும். தினமும் நீராடும் முன், கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு!’’ என்னும் மந்திரத்தை சொன்னால் போதும். மந்திரம் சொல்ல முடியாதவர்கள், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளே! இங்குள்ள நீரில் உங்களது புனித தன்மை நிரம்பட்டும்’’ என்று இந்த மந்திரத்தின் பொருள் சொல்லி நீராடலாம். மந்திரம் சொல்லும் போது  கைகளைத் தண்ணீரின் மீது வைத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !