உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் மூன்று நாள் தெப்போற்சவம் விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.காஞ்சிபுரத்தில் முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாக கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில்வளாக குளத்தில் தெப்போற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு, சுந்தராம்பிகை அம்பாளுடன் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு, குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர். வாண வேடிக்கைகள் நடந்தன. இந்த விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !