சேலத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்
ADDED :3123 days ago
சேலம்: சேலத்தில், ராதா கல்யாண மகோத்ஸவ விழா நடந்தது. சேலம், சின்னதிருப்பதி, சந்திரா கார்டன் அனெக்ஸ் பகுதியில், தாம்பிராஸ் முதியோர் இல்லம் உள்ளது. அங்கு ஆதரவற்ற, 40க்கும் மேற்பட்ட முதியோர் உள்ளனர். அங்கு, எட்டாம் ஆண்டாக, நேற்று, முதியோர் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், புத்துணர்வை உண்டாக்கி கவலைகளை போக்கவும், ராதா கல்யாண மகோத்ஸவம் நடந்தது. அதில், கிருஷ்ணர் மற்றும் ராதா சிலை வைக்கப்பட்டு, அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 11:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் வந்து தரிசனம் செய்தனர்.