அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை மகிஷாசூரமர்தனம்
ADDED :3123 days ago
அந்தியூர்: அந்தியூர் பத்தரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா தொடங்கியுள்ளது. இதையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கின்றன. இந்நிலையில் நாளை (22ம் தேதி) காலை, மகிஷாசூரமர்தனம் நிகழ்ச்சி நடக்கிறது.
மனித உடல், எருமை தலை கொண்ட மகிஷாசூரனிடமிருந்து, மக்களை காக்க காளியாக அவதரித்த அம்மனுக்கு நன்றி சொல்லும் விதமாக, இவ்விழா நடக்கிறது. இதில் குண்டத்துக்கு அருகில் குழி வெட்டி, எருமைக் கிடா பலி கொடுப்பது ஐதீகமாக உள்ளது. இதற்காக, நேற்று முதலே பக்தர்கள் நேர்த்திக்கடனாக எருமைக் கன்றுகளை கோவிலுக்கு கொடுத்து வருகின்றனர். இதில், ஒரு கன்றை மட்டும் பலி கொடுத்து விட்டு, மற்றவை ஏலத்தில் விடப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.