கரூர் வெங்கடரமண கோவிலில் மஹா புஷ்பயாகம்
ADDED :3223 days ago
கரூர்: கரூர், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று மாலை புஷ்பயாகம் நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நடந்து வருகிறது. கடந்த, மார்ச், 1ல், வெள்ளி கருட சேவையுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, கடந்த, 3ல் கொடியேற்ற நிகழ்ச்சி, 9 ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கடந்த, 13ல், தெப்பத்திருவிழா நடந்தது. நேற்று மாலை, 5:30 மணிக்கு கோவிலில் மஹா புஷ்பயாகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.