திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம்
ADDED :3227 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்ச விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவைத் தொடர்ந்து நடைபெற்று வரும் விடையாற்றி உற்சவத்தில், தவன சாத்துபடியில், காய்கறிகள் மற்றும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசுவாமி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.