புதுப்பேட்டை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3127 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து 17ம் தேதி காலை 8:30 மணிக்கு மஹா பூர்ணாஹீதியும், 9:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு, கோபி அய்யர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9:15 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீபாலமுருகனுக்கு கலச அபிஷேகம் நடந்தது.