பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில் வருண யாகம்
ADDED :3132 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி காமாட்சியம்மன் கோவிலில், வருண யாக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சிவாச்சாரியர்கள், பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் நின்று ஒரு லட்சம் வருண ஜபம் செய்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வருண ஜபம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மழை வேண்டி யாகம்: செல்லப்பம்பாளையம் பிரிவு சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி உடனமர் ஆனந்த வள்ளியம்மன் கோவிலில், உலக நலன், மழை வேண்டி வேள்வி இன்று நடக்கிறது.