உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தயாபுரம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா

தயாபுரம் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா

மானாமதுரை: மானாமதுரை உடைகுளம் தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனிபொங்கல் விழா கடந்த 15 ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கோவில் பூஜாரி சுப்பிரமணியன் தலைமையில் பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றிலிருந்து பூக்கரகம், தீச்சட்டி,பால்குடங்கள் எடுத்து வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !