உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதியவர்களுக்கு திருப்பதி தரிசனம்

முதியவர்களுக்கு திருப்பதி தரிசனம்

திருப்பூர்: ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், 350 முதியவர்கள், திருப்பதியில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 60 வயதிற்கு மேற்பட்ட, முதியோர்கள் , 350 பேர், இலவசமாக திருப்பதி அழைத்து செல்லப்பட உள்ளனர். பக்தர்கள் குழு, திருப்பூரிலிருந்து ரயில் மூலம் திருப்பதி சென்று வரவும், திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், தங்கும் வசதி, உணவு, பிரசாதம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உடன், திருச்சி ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த பாகவதர்கள் குழுவினரும் பங்கேற்கின்றனர். பத்து முதியவர்களுக்கு, ஒரு மேற்பார்வை உதவியாளர், மருத்துவ உதவி செய்ய டாக்டர் குழுவினர் உடன் செல்கின்றனர். திருப்பதி சென்று திரும்பும் பக்தர்கள், வீடுகளுக்கு செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அழைத்து செல்லப்பட உள்ளனர். பங்கேற்க விரும்பம் உள்ள முதியவர்கள், அடையாள அட்டையுடன், திருப்பூர் தாராபுரம் ரோட்டிலுள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல், விவரங்களுக்கு, 0421 2424401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என ஸ்ரீ வாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், துணை தலை வர் செல்வம், கவுரவ ஆலோசகர் முத்துநடராஜன், செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !