ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்
ADDED :3172 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கருட உருவம் பொறித்த கொடியை பக்தர்கள் சுமந்து ரதவீதியை சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவந்தனர். ரகுராம பட்டர் வேதம் முழங்க, கோயில் கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அன்னவாகனத்தில் ரதவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி லதா, கணக்கர் பூபதி செய்திருந்தனர்.