உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம்

முருகன்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம்

சேலம்:முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா முடிந்த நிலையில், நேற்று முருகன்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. சூரபத்மன் என்ற அசுரனை முருகன் வதம் செய்த நாளை, பக்தர்கள் சூரசம்ஹார விழாவாக கொண்டாடினர். அனைத்து முருகன் கோவில்களிலும், சூரபத்மனை, முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் "அரோகரா கோஷம் எழுப்பி, இறைவனை வழிபட்டனர். சூரசம்ஹார விழாவை தொடர்ந்து, நேற்று முருகன்- தெய்வானை திருக்கல்யாண உற்சவம், அனைத்து முருகன் கோவில்களிலும் நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவில், காவடி பழனியாண்டவர் முருகன் கோவில், அம்மாபேட்டை சுப்பிரமணியஸ்வாமி கோவில், அழகாபுரம் முருகன் கோவில், கந்தாஸ்ரமம் முருகன் கோவில், குமரகிரி பாலதண்டாயுதபாணி முருகன் கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களிலும், திருகல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவர் முருகன்- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !