மந்தைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :3116 days ago
மேலூர்: மேலூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள மந்தைக்கருப்பண்ண சுவாமி மற்றும் இராக்காயி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் எண்ணெய் தாளிதம் மற்றும் மாமிசம் இல்லாமல் கடும் விரதமிருந்தனர். காலை கோவிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முளைப்பாரியை இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள நாச்சரன் கண்மாயில் கரைத்தனர். கடும் வெயில் காரணமாக பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்ல விழாக் குழுவின் சார்பின் சார்பில் தேங்காய் மஞ்சி பரப்பி அதன் மீது லாரி மூலம் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்திருந்தனர்.