மொரட்டாண்டி கோவிலில் வசந்த நவராத்திரி விழா
ADDED :3116 days ago
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் வசந்த நவராத்திரியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில், உலகிலேயே மிக உயரமான 27 அடி விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்குள்ள லலிதா பரமேஸ்வரிக்கு, வசந்த நவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, நவாவரண பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிறுவனர் சிதம்பர குருக்கள் தலைமையில், கீதாசங்கர குருக்கள், கீதாராம குருக்கள் செய்திருந்தனர்.