ரா.பேட்டையில் ராமநவமி ஆறு நாள் கொண்டாட்டம்
ADDED :3112 days ago
ரா.பேட்டை: ராபர்ட்சன்பேட்டை சுவர்ணகுப்பம் பகுதியில் உள்ள சுப்ர சித்த மகாலட்சமி சத்ய நாராயணசாமி சமேத வீர ஆஞ்சனேயா கோவிலில், 37ம் ஆண்டு ராமநவமி உற்சவம், நாளை முதல் ஏப்ரல், 5ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை, கலச ஸ்தாபனம், கொடியேற்றல், ருத்ராபிஷேகம்; ஏப்., 1ம் தேதி, பக்த ஆஞ்சனேயர் உற்சவம், 2ம் தேதி, பஞ்சமுகி ஆஞ்சனேயர் உற்சவம், 3ம் தேதி, யோகி ஆஞ்சனேயர் உற்சவம், 4ம் தேதி, ஆபத்பாந்தவ ஆஞ்சனேயர் உற்சவம், 5ம் தேதி, ராமநவமி புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. தினமும் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும், உற்சவத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு, கோவிலின் ராஜேந்திர பிரசாத் தீட்சித் அழைப்பு விடுத்துள்ளார்.